ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி - எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணியும் கோலேதும் அடிக்காகததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் விஸ்வரூபமெடுத்த ஏடிகே:
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதன் பயணாக அந்த அணியின் நட்சத்திர் வீரர் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.