தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இபிஎல்: லிவர்பூலை புரட்டியெடுத்த ஆஸ்டன் வில்லா! - ஆஸ்டன் வில்லா

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா அணி 7-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை துவம்சம் செய்தது.

Man united trashed by liverpool 7-2
Man united trashed by liverpool 7-2

By

Published : Oct 5, 2020, 6:25 PM IST

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.04) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணி, ஆஸ்டன் வில்லா அணியை எதிர்த்து விளையாடியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஆஸ்டன் வில்லா அணியின் ஒல்லி வாட்கின்ஸ் (0llie watkins) ஆட்டத்தின் 4ஆவது, 22ஆவது, 39ஆவது நிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து, லிவர்பூலிற்கு அதிர்ச்சியளித்தார்.

இதற்கிடையில் ஆஸ்டன் வில்லா அணியின் ஜான் ஆட்டத்தின் 35’ஆவது நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோலை அடித்தார். லிவர்பூல் அணி சார்பில் முகமது சலாஹ் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.

இதன் மூலம் முதற்பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்டன் வில்லா அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்டன் வில்லா அணியில் ரோஸ் பார்க்லி (Ross Barkley), ஜாக் கிரேலிஷ் (Jack Grealish) அடுத்தடுத்து கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஆஸ்டன் வில்லா அணி 7-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இபிஎல் புள்ளிப்பட்டியலில் மூன்று வெற்றிகளுடன் ஆஸ்டன் வில்லா அணி இரண்டமிடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க:‘இந்த வெற்றி இனி வரும் போட்டியிலும் பிரதிபலிக்கும்’ - தோனி நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details