உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும், கால்பந்து போட்டிகளில்தான் இதன் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் ஜூன் மாதம் நடைபெறவிருந்த யூரோ கோப்பை, கோப்பா அமெரிக்கா தொடர் ஆகியவை அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, சாம்பியன்ஸ் லீக், லா லிகா, சீரி ஏ, இங்கிலிஷ் ப்ரீமியர், பண்டஸ்லிகா உள்ளிட்ட கால்பந்து தொடர்களும் ஏப்ரல் மாதம்வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டுள்ள பெரும்பாலான கால்பந்து வீரர்கள், ஆன்லைனில் கால்பந்து விளையாட்டை விளையாடி தங்களது பொழுதை கழித்துவருகின்றனர்.