ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் சீனாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையிலை இத்தொடருக்கான தேதியை ஆசிய கால்பந்து சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎஃப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 16ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் சீனாவின் பத்து நகரங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம் இதுவரை 16 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த இத்தொடரில், புதிதாக எட்டு அணிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏஎஃப்சியின் பொதுச்செயலாளர் வின்ட்சர் ஜான் கூறுகையில், "2023ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான ஏற்பாடுகளை சீன கால்பந்து சங்கம், உள்ளூர் அமைப்புக் குழு இணைந்து செய்துவருகின்றன. குறிப்பாக கரோனா சூழலிலும் உள்ளூர் அமைப்புக் குழு தங்களது பணியை முழுவீச்சில் செய்துவந்ததை நாம் அறிவோம். அதனால் நிச்சயம் இத்தொடரை வரலாற்று சிறப்புமிக்க தொடராக சீனா நடத்தும்" என நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:லா லிகா: மெஸ்ஸியின் அடுத்தடுத்த கோல்களால் பார்சிலோனா வெற்றி!