தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரொனால்டோ உடைப்பதற்காகவே காத்திருக்கும் சாதனைகள்! - GOAT

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

as-ronaldo-turns-35-heres-a-look-at-all-possible-records-he-can-break-this-year
as-ronaldo-turns-35-heres-a-look-at-all-possible-records-he-can-break-this-year

By

Published : Feb 5, 2020, 1:29 PM IST

2018ஆம் ஆண்டு நடந்த ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ஓட்டம் ஜாம்பவான் வீரர்கள் மத்தியிலும் வியந்து பார்க்கப்பட்டது. அவரது ஓட்டத்தை கணக்கிடும்போது ரசிகர்கள் மட்டுமல்ல கால்பந்து வீரர்களுமே ஆச்சரியமடைந்தனர். அவர் ஓடும் வேகம் மணிக்கு 33.98 கி.மீ. அதாவது 20 வயது வீரரால் கூட ரொனால்டோவின் ஓட்டத்தை ஓட முடியவில்லை. சமீபத்தில் சாம்ப்டோரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தரையிலிருந்து கிட்டதட்ட 2.5 உயரம் குதித்து அவர் கோல் அடித்ததைக் கண்டு உலகமே வியந்துபோனது.

ரொனால்டோ

30 வயதைக் கடந்தாலே கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில், 35 வயதிலும் கால்பந்து விளையாட்டின் அசுரனாக ஆடிக்கொண்டிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இதையும் படிங்க: கண்கலங்கிய ரொனால்டோ... காரணம் இதுதான்!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, கால்பந்து அரங்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார். ஸ்போர்டிங் சி.பி. (போர்ச்சுகல்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) உள்ளிட்ட பிரபல கால்பந்து கிளப் அணிகளில் விளையாடிய இவர் தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலியின் புகழ்பெற்ற யுவென்டஸ் அணிக்காகவும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்.

இவரின் வருகையால் ஸ்பெயின் கால்பந்து தொடர்களிலிருந்து ரசிகர்கள் இத்தாலியின் சீரி ஏ தொடர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா சாம்பியன்ஷிப், பிஃபா கிளப் என எந்தத் தொடராக இருந்தாலும் ரொனால்டோவுக்குத்தான் அங்கே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம்.

இதுநாள் வரை சாம்பியன்ஸ் லீக் தொடரில் 17 கோல்கள் அடித்த ஒரே வீரர் ரொனால்டோதான். போர்ச்சுகல் அணிக்காகவும் கிளப் அணிக்காகவும் இதுவரை மொத்தமாக 722 கோல்களை அடித்துள்ளார். இவ்வளவு சாதனைகளைப் படைத்தவரின் பிறந்தநாளை ரொனால்டோவைப்போல் அவரது ரசிகர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்க்கின்றனர்.

ரொனால்டோ

எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கும் ரொனால்டோ, இந்த வருடத்தில் உடைக்கவிருக்கும் சாதனைகளைப் பற்றி பார்க்கலாம்...

*சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 99 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, வருகிற யூரோ கோப்பையில் ஆடினால் நிச்சயம் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முன்னாள் வீரர் அலியின் 109 கோல்களை முறியடிப்பார்.

*இந்த வருடத்தில் இத்தாலியின் சீரி ஏ தொடரில் அதிக கோல்கள் அடித்து முதலிடம் பிடித்தால், பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ ஆகிய மூன்று தொடர்களிலும் அதிக கோல் அடித்து முதலிடம் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரொனால்டோவின் கால்களுக்கு வந்து சேரும்.

*சாம்பியன்ஸ் லீக் தொடரில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் 8 ஹாட்ரிக் கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கின்றனர். இன்னும் ஒரு ஹாட்ரிக் கோல் அடித்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ஹாட்ரிக் கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கலாம்.

இதையும் படிங்க: அங்கே மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது; இங்கே ரொனால்டோவுக்கு சிறந்த வீரருக்கான விருது!

ABOUT THE AUTHOR

...view details