நடப்பு சீசனுக்கான இங்லிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஆர்சனல் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. ஆர்சனல் அணியின் சொந்த மைதானமான எமிரேட்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் ஆர்சனல் முதல் கோல் அடித்து அசத்தியது. ஆர்சனல் அணியின் முன்கள வீரர் நிக்கோலஸ் பேப்பே (Nicholas Pepe) மிரட்டலான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.
இதைத் தொடர்ந்து, முதல் பாதி முழுவதுமே ஆர்சனல் அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, 42ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணிக்கு வழங்கப்பட்ட கார்னர் கிக் வாய்ப்பை அந்த அணியின் டிஃபெண்டர் சாக்ரடிஸ் பபஸ்ததோபோலஸ் (Sokratis Papastathopoulos) கோல் அடித்து மிரட்டினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் அடிக்க முடியாதவாறு ஆர்சனல் அணி சிறப்பாக டிஃபெண்டிங் செய்தது.