தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இபிஎல்: காஸியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற ஆஸ்டன் வில்லா! - Aston Villa

இபிஎல் கால்பந்து தொடரில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் போர்ம் அணியை வீழ்த்திவெற்றி பெற்றது.

Anwar El Ghazi's double for Aston Villa ruins Sam Allardyce's start at West Brom
Anwar El Ghazi's double for Aston Villa ruins Sam Allardyce's start at West Brom

By

Published : Dec 21, 2020, 4:04 PM IST

நடப்பு சீசனுக்கான இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணி, வெஸ்ட் போர்ம் அணியை எதிர்கொண்டது.

தொடக்கத்திலேயே அசத்திய காஸி

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஐந்தாவது நிமுடத்திலேயே ஆஸ்டன் வில்லா அணியின் நட்சத்திர வீரர் அன்வர் எல் காஸி கோலடித்து அசத்தினார்.

முதல் பாதி ஆட்டத்தில் கோலடிக்க முயற்சித்த வெஸ்ட் போர்ம் அணியின் அனைத்து முயற்சிகளையும் ஆஸ்டன் வில்லா அணி தகர்த்தது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்டன் வில்லா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காஸி

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்டன் வில்லா அணிக்கு ஆட்டத்தின் 84ஆவது நிமிடத்தில் ட்ரோர் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பின்னர் ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்தில் ஆஸ்டன் வில்லா அணிக்கு பெனால்டி ஷூட் அவுட்டிற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய காஸி கோலடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆஸ்டன் வில்லா அபார வெற்றி

இதையடுத்து இறுதிவரை போராடிய வெஸ்ட் போர்ம் அணி எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஆஸ்டன் வில்லா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் போர்ம் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்டன் வில்லா அணி 22 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க:சீரி ஏ: குறைந்த நேரத்தில் கோலடித்து சாதனை படைத்த ரஃபேல் லியோ!

ABOUT THE AUTHOR

...view details