அமெரிக்கா: விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், பார்வையாளர்களாக அமர்ந்திருப்போர் தங்கள் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ ப்ரொபோஸ் செய்வது என்பது வாடிக்கையாக நடக்கக்கூடிய ஒன்று. ஆனால், நேற்று அமெரிக்காவில் கால்பந்து வீரர், மைதானத்தில் ப்ரொபோஸ் செய்த காணொலிதான் நெட்டிசன்களுக்கான இன்றைய "ஹார்ட்" டாபிக்.
மேஜர் லீக் சாக்கர் (Major League Soccer) எனும் கால்பந்து தொடரில் மினசோட்டா எஃப்சி அணிக்காக விளையாடிவருபவர் ஹஸ்ஸானி ஸ்டீபென்சன். இவர் நேற்றைய போட்டிக்கு முன்னர், தனது காதலி பெட்ரா வுகோவிக்கிடம் தன்னுடைய திருமண விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பெட்ரா, பெரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஸ்டீபென்சனின் காதலை ஏற்றுக்கொண்டார்.
அனுபவம் புதுமை