மலேசியாவில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்கு இடையே ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அரையிறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பகாங், பெராக் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பகாங் அணி வீரர்கள் ஹெரால்டு கோலன் 12ஆவது நிமிடத்திலும், மொகமடோவ் சுமரே 39ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
பின்னர் இரண்டாவது பாதியில் 54ஆவது நிமிடத்தில், பெராக் அணியின் பார்த்திபன் ஜனசேகரன் கோல் அடித்தார். பின்னர் மேற்கொண்டு இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 2- 1 என்ற நிலையே நீடித்தது. அதைத் தொடர்ந்து கூடுதலாக கடைசி ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.