கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் நிலவி வந்த அசாதாரண சூழ்நிலை, தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், பல்வேறு நாடுகளும் விளையாட்டு வீரர்களை பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், கடந்த ஒரு வாரமாக வீரர்களுக்கான தடை நீக்கப்பட்டு, சில கட்டுப்பாடுகளுடன் விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சி மேற்கொண்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சில நாட்களுக்கு முன்னதாக பயிற்சியை மேற்கொண்ட ஜுவென்டஸ் அணியின் ரொனால்டோ உள்பட அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கெள்ளபட்டது.
இப்பரிசோதனை முடிவில் ஜுவென்டஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என ஜுவென்டஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அணி நிர்வாகம் கூறுகையில், "நேற்று (மே 21) நடைபெற்ற கரோனா கண்டறிதல் சோதனையில் பயிற்சிக்கு திரும்பிய அனைத்து ஜுவென்டஸ் அணி வீரர்களும் மேற்கொண்டனர். இப்பரிசோதனை முடிவில் வீரர்களில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:உடல்நிலை காரணமாக ஓய்வை அறிவித்த ஸ்பேனிஷ் கால்பந்து வீரர்!