தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2 ஆண்டுகள், 9 மாதங்கள், 18 நாள்கள்... கோமாவிலிருந்து மீண்ட அயாக்ஸ் வீரர்! - Abdelhak Nouri recovers from coma

மூன்று ஆண்டுகளுக்கு முன் போட்டியின் நடுவே ஏற்பட்ட காயத்தால் கோமாவில் சரிந்த அயாக்ஸ் அணியின் அப்தெல்ஹாக் மீண்டுள்ளார்.

ajax-player-abdelhak-nouri-recovers-from-coma-after-2-years-9-months
ajax-player-abdelhak-nouri-recovers-from-coma-after-2-years-9-months

By

Published : Mar 27, 2020, 3:53 PM IST

2017ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியன்று நடந்த ஜெர்மனியைச் சேர்ந்த வெஸ்டர் பிரெமென் அணிக்கு எதிரான நட்புரீதியிலான போட்டியில் அயாக்ஸ் அணி பங்கேற்றது.

இந்தப் போட்டியின் நடுவே அயாக்ஸ் அணியின் அப்தெல்ஹாக் நவுரி (22), காயம் காரணமாக மைதானத்திலேயே சரிந்தார். இதையடுத்து முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மைதானத்தின் நடுவே ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிகிச்சையளித்த மருத்துவர்கள் அப்தெல்ஹாக் கோமாவுக்கு சென்றுவிட்டதாக கூறினர். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகள், 8 மாதங்கள், 19 நாள்களுக்கு பிறகு அப்தெல்ஹாக் கோமாவிலிருந்து மீண்டுள்ளார். இவர் கோமாலிருந்து மீண்டபின், தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்து கால்பந்து போட்டிகளைப் பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக கால்பந்து போட்டிகள் நடக்காத நிலையில், அப்தெல்ஹாக் கோமாவிலிருந்து மீண்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லூகாஸ் மோரா ஹாட்ரிக்- கடைசி நொடி பக்... பக்...! ஆனந்தக் கண்ணீரில் வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details