இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேல், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா(FIFA) கவுன்சில் உறுப்பினாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏஎஃப்சி கால்பந்து பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஃபிஃபா கால்பந்து கவுன்சில் உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயலர் குஷல் தாஸ், பிரஃபுல் படேல், மூத்த துணை தலைவர் சுப்ரதா தத்தா, உள்ளிட்ட எட்டு பேர் போட்டியிட்டனர். அதில், பிரஃபுல் படேல் 46 வாக்குகளில் 38 வாக்குகளைப் பெற்றதால், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.