கடந்த ஐ லீக் சீசனை சென்னை சிட்டி எஃப்சி அணி வென்றதால், நடப்பு சீசனுக்கான ஏஎஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) கால்பந்து கோப்பை தொடருக்கு தகுதிபெற்றது. சென்னை சிட்டி எஃப்சி அணி, மாலத்தீவை சேர்ந்த மசியா, டி.சி. ஸ்போர்ட்ஸ் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பஷூந்தரா கிங்ஸ் அணியுடன் குரூப் இ பிரிவில் இடம்பெற்றிருந்தது.
இதில், கடந்த 11ஆம் தேதி மசியா அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் சென்னை அணி விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை அணி வரும் ஏப்ரல் 15இல் டி.சி. ஸ்போர்ட்ஸ் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 29ஆம் தேதி பஷூந்தரா கிங்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவிருந்தது.