தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐரோப்பா கால்பந்து லீக்: 2ஆவது வெற்றியைப் பெற்ற ஏசி மிலன், ஆர்சனல்...! - டோட்டன்ஹம் அணி தோல்வி

பாரிஸ்: ஐரோப்பா கால்பந்து தொடரின் நட்சத்திர அணிகளான ஏசி மிலன், ஆர்சனல் அணிகள் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ac-milan-arsenal-win-tottenham-lose-in-europa-league
ac-milan-arsenal-win-tottenham-lose-in-europa-league

By

Published : Oct 30, 2020, 3:51 PM IST

ஐரோப்பா கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதன் நேற்றையப் போட்டியில் ஏசி மிலன் அணியை எதிர்த்து ஸ்பார்ட்டா ப்ராக் அணி ஆடியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஏசி மிலன் அணி, முதல் பாதி ஆட்டத்தில் டயஸ் முதல் கோலை அடிக்க, இரண்டாம் பாதி ஆட்டத்தில் ரஃபேல், டியோகோ ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கணக்கில் ஏசி மிலன் அணி வெற்றிபெற்றது.

இதேபோல் ஆர்சனல் அணியை எதிர்த்து டன்கல்க் அணி ஆடியது. அதில் ஆர்சனல் அணியின் எடி, ஜோ ஆகியோர் 42, 44 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இதனைத்தொடர்ந்து 46ஆவது நிமிடத்தில் நிக்கோலஸ் பீப் அடுத்த கோலை அடிக்க, டன்கல்க் அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் ஆர்சனல் அணி 3-0 என டன்கல்க் அணியை வீழ்த்தியது.

இதனிடையே நட்சத்திர அணியான டோட்டன்ஹம் அணி புதிய அணியான ஆண்ட்வெர்ப் அணியிடம் வீழ்ந்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஆண்ட்வெர்ப் அணியின் லியோர் 29ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலைப் பெற்றது. இறுதி வரை டோட்டன்ஹம் அணியால் கோல் அடிக்க முடியாததால், ஆண்ட்வெர்ப் அணி 1-0 என வெற்றிபெற்றது.

இதையும் படிங்க:சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details