தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாலக்காட்டில் கால்பந்து மைதான கேலரி இடிந்து விபத்து - 50 பேர் காயம் - football gallery accident

பாலக்காடு கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்டிருந்த ரசிகர்கள் அமரும் காட்சிக் கூடம் சரிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்தனர்.

football ground collapses
football ground collapses

By

Published : Jan 20, 2020, 8:38 AM IST

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னாவில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அனைத்து இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆர். தனராஜன் என்ற கால்பந்து வீரர் மாரடைப்பால் உயிழந்தார்.

இதனிடையே உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவி அளிப்பதற்காக நிதி திரட்டும் கால்பந்துப் போட்டிக்கு நேற்று, பாலக்காடு மாவட்ட கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அங்குள்ள கால்பந்து மைதானத்தில் தற்காலிகமாக ரசிகர்கள் அமர்வதற்காக காட்சிக் கூடமும் அமைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இப்போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் அந்த காட்சிக் கூடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென அந்தக் காட்சிக் கூடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இதில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும், விபத்தின் போது மைதானத்தில் இருந்த இந்திய கால்பந்து ஜாம்பவான்களான ஐஎம் விஜயன், பாய்சுங் பூட்டியா ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details