தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணி பங்கேற்பு? - 2022 கத்தார் உலகக் கோப்பை காலபந்து போட்டி

தோஹா: கத்தாரில் நடைபெறவுள்ள 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் பங்கேற்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக ஃபிஃபாவின் கத்தார் தலைமைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

QATAR

By

Published : May 20, 2019, 10:19 AM IST

2022ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், 48 அணிகள் போட்டியிடவுள்ளதாக ஃபிஃபாவின் கத்தார் தலைமைச் செயல் அலுவலர் அல் காதர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இப்போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக அல் காதர் தெரிவித்தார். மேலும், இது குறித்து உலகக் கோப்பை கால்பந்து சம்மேளனத்துடன் ஆலோசனை நடத்திவருவதாகவும், பேச்சுவார்த்தை முடிவடைந்தபின் இதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முடிவை, ஜுன் 5ஆம் தேதி ஃபிஃபா அறிவிக்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details