நீலகிரி: வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை உக்ரைன் நாட்டில் மகளிருக்கான மினி உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் நடைபெறுகிறது. 23 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்தத் தொடரில் பல்வேறு நாடுகளின் கால்பந்து அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.
இந்தத் தொடரில், இந்திய மகளிர் அணி பங்கேற்க உள்ள நிலையில், இந்திய அணிக்கு தமிழ்நாட்டிலிருந்து உதகையைச் சேர்ந்த சௌமியா, ஜெய்ஸ்ரீ, எப்சிபா கிரேசி, சஞ்சனா ஆகிய நான்கு மாணவிகள் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இந்த நான்கு மாணவிகளும் உதகையில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்துவருகின்றனர்.
தீவிரப் பயிற்சி
இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள நான்கு நீலகிரி மாணவர்கள் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள இந்த நான்கு மாணவிகளும் உதகையில் உள்ள மலை மேலிட விளையாட்டுப் பயிற்சி மைதானத்தில் நாள்தோறும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.
ஏற்கெனவே, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் கால்பந்துப் போட்டிக்கு இந்திய அணிக்காக உதகையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தேர்வாகி விளையாடிய நிலையில், தற்போது நான்கு மாணவ வீராங்கனைகள் தேர்வாகி இருப்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் பதக்க கனவு நிறைவேறும் - தன்ராஜ் பிள்ளை!