தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா எதிரொலி: பாலன் டி'ஓர் 2020 விருது வழங்கும் விழா ரத்து! - பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு

கரோனா வைரஸ் காரணமாக உலக கால்பந்து விளையாட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் பாலன் டி'ஓர் 2020 (Ballon d'Or 2020) விருது வழங்கும் விழாவை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு ரத்து செய்துள்ளது.

2020 Ballon d'Or cancelled in wake of COVID-19 pandemic
2020 Ballon d'Or cancelled in wake of COVID-19 pandemic

By

Published : Jul 21, 2020, 2:46 AM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பெருந்தோற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக, கால்பந்து விளையாட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பாலன் டி'ஓர் விருதின், இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழாவை ரத்து செய்வதாக பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்தாண்டுக்கான பாலன் டி'ஓர் விருது வழங்கும் விழா ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் அடுத்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details