தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தனிப்பட்ட வாழ்வு சரியாக அமையவில்லை: நெய்மர்

தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, கால்பந்து ரீதியாகவும் சரி 2019ஆம் ஆண்டு சரியாக அமையவில்லை என நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.

2019 was tough for me, both professionally & personally: Neymar
2019 was tough for me, both professionally & personally: Neymar

By

Published : Jan 10, 2020, 4:00 PM IST

கால்பந்து விளையாட்டு வீரர்களிலேயே கடந்த ஆண்டு அதிகமான சர்ச்சைகளில் சிக்கியவர் நெய்மர்தான். மைதானத்தில் ரசிகர்களை அடித்து காயம் ஏற்படுத்தியது, பாலியல் வழக்கு, தொடர் காயங்கள் என 2019ஆம் ஆண்டு நெய்மரை பாடாய் படுத்தியது.

கடந்த ஆண்டு குறித்து நெய்மர் பேசுகையில், தனிப்பட்ட முறையிலும் சரி, கால்பந்து நீதியாகவும் சரி கடந்த ஆண்டு எனக்கு சரியாக அமையவில்லை. நிறைய படிப்பினைகளைக் கொடுத்தது.

காயத்திலிருந்து விடுபட்டு, விளையாடும்போது மீண்டும் காயம் ஏற்பட்டு மனதீரியாகவும் பாதிக்கப்பட்டேன். இவையனைத்தையும் நல்ல விதமாக எடுத்துக்கொண்டு 2020ஆம் ஆண்டை எதிர்கொள்கிறேன் எனக் கூறினார்.

பின்னர் ஐந்து பேர் கொண்ட இரண்டு கனவு அணியினைத் தேர்வு செய்யவேண்டும் என்றால் நெய்மர் ஜூனியர் யார் யாரையெல்லாம் தேர்வு செய்வார் என்ற கேள்விக்கு, மிகவும் கடினமான கேள்வி. நிறைய சிறந்த வீரர்கள் உள்ளார்கள்.ரோமாரியோ, ரொனால்டோ, ஸிடேன், இம்ராஹிமோவிக் ஆகியோருடன் நானும் ஆடவேண்டும் என்ற ஆசை உள்ளது.

தற்போது ஆடும் வீரர்களில் தேர்வு செய்யவேண்டும் என்றால், மெஸ்ஸி, சுவாரஸ், பாப்பே, போக்பா, ஹசார்ட் ஆகியோரைத் தேர்வு செய்வேன்.

ஓய்வு பெற்ற வீரர்களில் தேர்வு செய்யவேண்டும் என்றால், ஸாவி, லாம்பெர்ட், ஜெராட், பெக்ஹாம், ஹென்றி ஆகியோரைத் தேர்வு செய்வேன் என்றார்.

இதையும் படிங்க: 100ஆவது போட்டி... 100ஆவது கோல்... கெத்து காட்டிய எஃப்சி கோவா

ABOUT THE AUTHOR

...view details