தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நவம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது ஐ-லீக் கால்பந்து தொடர் - football league in india

இந்தியாவில் நடத்தப்படும் ஐ-லீக் கால்பந்து தொடரின் 13ஆவது சீசன் நவம்பர் 30தேதி தொடங்குகிறது.

football

By

Published : Nov 21, 2019, 8:42 PM IST

இந்தியாவில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்கிடையே நடத்தப்படும் ஐ-லீக் தொடரானது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஐ-லீக் தொடரின் 13ஆவது சீசன் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மோகுன் பாகன் எஃப்.சி. - ஐசாவால் எஃப்.சி. அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் மொத்தம் 11 அணிகள் களமிறங்குகின்றன. இதில் டிஆர்ஏயு எஃப்.சி அணி புதிய அணியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கிளப்களுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் காணவுள்ளனர். அதன்படி கொல்கத்தாவைச் சேர்ந்த ஈஸ்ட் பெங்கால் மற்றும் மோகுன் பாகன் அணிகளும், மணிப்பூரைச் சேர்ந்த நேரோக்கா எஃப்.சி மற்றும் டிஆர்ஏயு எஃப்.சி அணிகளும் மோதவுள்ளன.

ஐ-லீக் தொடரின் வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் வழங்கப்படும். அதேபோன்று மூன்றாவது இடத்திற்கு ரூ.40 லட்சம், நான்காவது இடத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் பட்டேல், ஐ-லீக் தொடர் இந்தியா முழுவதிலும் கால்பந்து விளையாட்டை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிவருகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்

ஐ-லீக் தொடரின் கடந்த சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த் சென்னை சிட்டி கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ABOUT THE AUTHOR

...view details