ஹராரே:இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் 2ஆவது ஒருநாள் போட்டி ஹராரோவில் இன்று (ஆக. 19) தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் 38.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக சியேன் வில்லியம்ஸ் 42 பந்துகளுக்கு 42 ரன்களை எடுத்தார். அதேபோல ரியான் பர்ல் 47 பந்துகளுக்கு 39 ரன்களையும், சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா இருவரும் தலா 16 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அக்சர் படேல், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.