தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"உலகக் கோப்பை அணியில் சாஹலை தேர்வு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" - யுவராஜ் சிங் - ஆஸ்திரேலியா

ICC world cup India squad: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணி சிறப்பாக இருப்பதாகவும், சுழல் பந்து வீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்திருக்களாம் என்று கூறியுள்ளார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:48 PM IST

Updated : Oct 2, 2023, 8:52 PM IST

ஹைதரபாத்: ஐசிசி நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டிகள் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அணியை மாற்றம் செய்வதற்கான கடைசி நாளான நேற்று, இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கூறியதாவது, "இந்திய அணியின் அமைப்பு சிறப்பாக உள்ளது. ஆனால், இந்தியாவில் அனைத்து போட்டிகளும் நடைபெறுவதால், சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்திருக்கலாம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், லெங் ஸ்பின்னர்களைத் தேர்வு செய்வது எப்போதும் ஆட்டம் வெற்றி பெற உதவியாக இருக்கும். ஆனால், அணியில் நலன் கருதிதான் அணியின் கேப்டன் (ரோகித் சர்மா) மற்றும் கோச் (ராகுல் டிராவிட்) இந்த முடிவை எடுத்திருப்பார்கள்" என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில், ஆஃப் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் குல்திப் யாதவ், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், நடந்து முடிந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக அக்சர் பட்டேல் போட்டியில் இருந்து விலகி ஓய்வு பெற்று வந்தார். இதனால் அவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா உடனான ஒரு நாள் போட்டி தொடரிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும், அக்ஸர் பட்டேல் தனது காயத்தில் இருந்து மீண்டு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக மற்றொரு ஆஃப் ஸ்பின்னரும், ஆல்-ரவுண்டருமான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்தியாவின் முதல் போட்டி, பலமுறை கோப்பை வென்று சாம்பியன்களாக இருக்கும் ஆஸ்திரேலியாவுடன், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா வர பாகிஸ்தான் அணிக்கு இவ்வளவு பிரச்சினையா? அதான் இவ்வளவு லேட்டா!

Last Updated : Oct 2, 2023, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details