தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு - சவுராஷ்டிரா கிரிக்கெட் அணி

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட்(29) இன்று(அக்.16) மாரடைப்பால் உயிரிழந்தார்.

Avi Barot dies
Avi Barot dies

By

Published : Oct 16, 2021, 3:31 PM IST

காந்திநகர்:குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட்(29) இன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். மொத்தம் 38 போட்டிகளில் விளையாடி 1,547 ரன்கள் எடுத்தவர். அதில் 21 ரஞ்சி டிராபி, டி20 போட்டிகளிலும் அடங்கும்.

இவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் "29 வயதில் அவி பரோட் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:டாக்டர் படம் பார்க்கச் சென்றபோது விபரீதம்: 2 வயது குழந்தை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details