மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு சீசனுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி தேர்வு மும்பையில் நடைபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கத் தவறியதால், ஹர்த்திக் பாண்ட்யவுக்கு பதிலாக அயர்லந்து தொற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜஸ்பிரித் பும்ராவை துணை கேப்டனாக அறிவிப்பது குறித்த தகவல்கள் தீயாய் பரவின.
இருப்பினும் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்கும் கே.எல். ராகுலுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. சூர்யாகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில் அது உடைக்கப்பட்டு அவரும் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார்.
தமிழக வீரர்கள் யாரும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. சர்ச்சை நாயகன் சஞ்சு சாம்சனுக்கும் இந்திய அணியில் இடம் அளிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் வருமாறு : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது. சிராஜ், குல்தீப் யாதவ்.
இதையும் படிங்க :Ind Vs Nep Asia Cup 2023 : இந்தியா அதிரடி! சூப்பர் 4 சுற்றில் களமிறங்கும் இந்திய அணி!