ஹைதராபாத்:ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6வது லீக் போட்டில் நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை உலக கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறையே சந்தித்துள்ளது. உலக கோப்பைக்கு தேர்வாகி அவர்கள் முதல் போட்டியாக நியூசிலாந்தை சந்தித்தனர். அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று நடக்கும் இராண்டாவது போட்டியில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி தயாராகி வருகிறது. இருப்பினும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை சமாளிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.