கேப்டவுன்:மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டம் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதியது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஸ்டாஃபனி டெய்லர் 40 பந்துகளுக்கு 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல ஷெமைன் கேம்பெல் 36 பந்துகளுக்கு 30 ரன்களையும், செடியன் நேஷன் 18 பந்துகளுக்கு 21 ரன்களையும் எடுத்தனர்.
மறுபுறம் பந்து வீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல ரேணுகா தாக்கூர் சிங், பூஜா வஸ்த்ரகர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த வகையில் 119 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஷஃபாலி வர்மா 23 பந்துகளுக்கு 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.