கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.26) நடந்தது. ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டந் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக பெத் மூனி 53 பந்துகளுக்கு 74 ரன்களை எடுத்தார். அதேபோல ஆஷ்லே கார்ட்னர் 21 பந்துகளுக்கு 29 ரன்களையும், அலிசா ஹீலி 20 பந்துகளுக்கு 18 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் பந்துவீச்சில், தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் மரிசான் கேப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில், 157 ரன்கள் வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.