ஐதராபாத் : 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், வீராங்கனைகளை தக்கவைக்கும் காலக்கெடு கடந்த 15ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 13 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று மகளிருக்கான பிரிமீயர் லீக் போட்டி நடப்பாண்டு முதல் தொடங்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இடம் பெற்று உள்ளன.
நடப்பாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியனஸ் அணி கைப்பற்றியது. இறுதி ஆடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் ஆனது. 2024ஆம் அண்டுக்கான மகளிரி பிரிமீயர் லீக் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், தங்களிடம் உள்ள வீரர்களை தக்கவைத்துக் கொள்ள கடந்த அக்டோபர் 15ஆம் தேதியை இறுதி நாளாக பிசிசிஐ அறிவித்து இருந்தது.
பிசிசிஐ விதித்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில், எந்தெந்த அணிகள் எத்தனை வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டது என்ற பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அதன்படி நடப்பு சாம்பியன் மும்பை அதிகபட்சமாக 13 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டு உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹெய்லி மேத்யூஸ், யஷ்டிகா பாட்டியா உள்ளிட்ட 13 வீராங்கனைகளை தக்க வைத்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 5 அணிகளையும் சேர்த்து 60 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 21 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு சீசனில் இரண்டாவது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் 15 வீராங்கனைகள் தக்கவைத்து உள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 வீராங்கனைகளை தக்க வைத்து உள்ளது.
ஒட்டுமொத்த அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் :
டெல்லி கேபிட்டல்ஸ் :
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்:ஆலிஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசான் கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தியா, தனியா பத்தியா சாது.
வெளியேறப்பட்ட வீராங்கனைகள்: அபர்ணா மொண்டல், ஜாசியா அக்தர், தாரா நோரிஸ்.
குஜராத் ஜெயண்ட்ஸ் :