மும்பை: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 12) நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. மும்பை ப்ராபோன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், உ.பி. வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி 46 பந்துகளுக்கு 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தேவிகா வைதியா 6 ரன்கள் மட்டும் சேர்த்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த தஹிலா மெக்ராத் 37 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதையடுத்து கிரன் நேவ்கிர் 14 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 159 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்கை நோக்கு மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹோலி மேத்யூஸ் 12 ரன்கள் மட்டும் எடுத்து எக்லஸ்டோனால் வெளியேற்றப்பட்டார். மற்றொரு தொடக்க வீராங்கனை யாஷ்டிகா பாட்யா, சீரிய முறையில் ஆடி அணியை முன்னுக்கு கொண்டு சென்றார். பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.