மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாடி வருகிறது. இதில் நேற்று (டிச.24) டெஸ்ட் போட்டியானது முடிவடைந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 4 அறிமுக வீராங்கனைகள் தேர்வாகி உள்ளனர்.
இதில் ஸ்ரேயங்கா பாட்டீல், டைட்டாஸ் சாது மற்றும் சைகா இஷாக் ஆகியோர் அண்மையாகச் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகினர். தற்போது இவர்கள் ஒருநாள் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். அதேபோல் 20 வயதேயான மன்னத் காஷ்யா டி20 போட்டியில் தக்கவைக்கப்பட்டதுடன், தற்போது அவர் ஒருநாள் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் ஜனவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரானது மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஒருநாள் தொடருக்கான அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விகீ), ரிச்சா கோஷ் (விகீ), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், சாது, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ஹர்லீன் தியோல்.
டி20 தொடருக்கான அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விகீ), ரிச்சா கோஷ் (விகீ), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.
இதையும் படிங்க:புறா சின்னத்தை பயன்படுத்திய கவாஜா.. தடை விதித்த ஐசிசி!