தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

WI vs IND: இந்திய அணியுடன் பூரனின் படைகள் இன்று மோதல்! - டிரினிடாட் தீவுகள்

மேற்கு இந்திய தீவுகள், இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

WI vs IND
WI vs IND

By

Published : Jul 22, 2022, 4:53 PM IST

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளை விளையாட இந்தியா அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிரினிடாட் தீவுகளின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்களுக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருந்தார்.

யார் ஓப்பனர்:இந்திய அணி ஓப்பனராக ஷிகர் தவானுடன் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வியெழுந்துள்ளது. இடது - வலது காம்பினேஷனுக்காக சுப்மன் கில், ருதுராஜ்-க்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர்.

ஜடேஜா களமிறங்குவது கடினம் என கூறப்படும் நிலையில், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக விளையாட வாய்ப்புள்ளது.

கூல் தவான்: பந்துவீச்சில் சஹால், சிராஜ், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், தன் ஃபார்ம் மீது வைக்கப்படும் கேள்விகளையும், கருத்துகளையும் கண்டுக்கொள்ள மாட்டேன் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகளை பொறுத்தவரை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் செயல்பட உள்ளார். மேலும், ஹோல்டர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், பின்வரிசையில் மே. இ. தீவுகளுக்கு அவர் பலனளிப்பார். மிடில் ஆர்டரில் அகேல் ஹூசைன், அல்ஸாரி ஜோசப், கேசி கார்டி ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்தியா:ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

மேற்கு இந்திய தீவுகள்:நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஷம்மாரா ப்ரூக்ஸ், கேசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹூசைன், அல்ஸாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மையர்ஸ். குடகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மான் பாவெல், ஜெய்டன் சீல்ஸ்

இதையும் படிங்க:இலங்கையில் இல்லை ஆசியக்கோப்பை - மழையில்லாத நாட்டிற்கு மாற்றிய கங்குலி!

ABOUT THE AUTHOR

...view details