ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை இரவு (அக்.14) 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்தியன் பிரிமியர் லீக் ஆட்டத்தின் 13 வது சீசனின் இறுதி கட்டத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்ள தயாராகி வருகின்றன. 2020 லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு புது உத்வேகத்துடன் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதில், தோனி, ஜடேஜா, டூ ப்ளெஸிஸ், ரெய்னா, பிராவோ என மூத்த வீரர்கள் பலர் இருந்தாலும், ருதுராஜ், கெய்க்வாட், ராபின் உத்தப்பா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர்களின் ஆட்டம் கொஞ்சம் முன்னிலை பெறுகிறது.
பல விமர்சனங்களையும் தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு வந்துள்ளது. 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக இறுதி போட்டிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் பயணம், 2021ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதி வரை தொடர்கிறது.
இதுவரை நடந்த 12 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. 5 முறை கோப்பையை தவற விட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் 2020ஆம் ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது. மற்ற அனைத்து வருடங்களும் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா, டூ ப்ளெஸிஸ், கெய்க்வாட் ஆகியோரின் செயல்பாடு நாளை பைனலில் முக்கிய பங்காற்றும் என நம்பலாம்.