ஐதராபாத் :உலக சாம்பியனான, நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை பவுண்டரி வித்தியாசத்தில் வீழத்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி வெற்றிக்காக கடுமையாக போராடி வருகிறது. விளையாடிய 4 ஆட்டங்களில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்து உள்ளது. வெறும் இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இங்கிலாந்து அணி இடம் பெற்று உள்ளது.
நடப்பு சாம்பியனுக்கு நடந்த பரிதாபம் என்று கூறினாலும் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து அணியின் விளையாட்டு பரிதாபகர நிலையில் உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வெளிவந்த கருத்து கணிப்பில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணி நடப்பு தொடரில் மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கும் என்றும் கோப்பையை தக்கவைக்கும் நிலையில் உள்ளது என்றும் கணிக்கப்பட்டது.
நடப்பு தொடரில் மூன்று தோல்விகளை சந்தித்து உள்ள இங்கிலந்து அணியின் அரைஇறுதி கனவு ஏறக்குறை சிக்கலுக்கு உள்ளாகி உள்ளாது. இனி வரும் ஆட்டங்களில் எல்லாம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்புக்காக மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து பேட்ஸ்மேன் பிரன்டன் மெக்குலம் நியமிக்கப்பட்டதில் இருந்து அந்த அணி வீரர்கள் பாஸ்பால் (Bazball) யுக்தியை கையாண்டு வருகின்றனர். அதாவது தடுப்பாட்டடத்தில் அதிவிரைவில் ரன்கள் குவிப்பது என்பது தான். இந்த யுக்தியை டெஸ்ட் கிரிக்கெட்டில் கையாண்ட இங்கிலாந்து வீரர்கள் வெற்றிகளை வாரி குவித்தனர்.