தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND Vs WI : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்... டாஸ் வென்று மே.தீவுகள் பேட்டிங்! - Cricbuzz

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறி வருகிறது. 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் அணி ஆட்டம் கண்டு உள்ளது.

India
India

By

Published : Jul 12, 2023, 8:04 PM IST

Updated : Jul 12, 2023, 11:08 PM IST

டொமினிகா : இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்சை கிரெய்க் பிராத்வெயிட் மற்றும் டெஜ்நரேன் சந்திரபோல் ஆகியோர் தொடங்கி விளையாடி வருகின்றனர். 5 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் குவித்து உள்ளது.

வீரர்கள் விவரம் :

இந்தியா : ரோஹித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் : கிரெய்க் பிராத்வெயிட்(கேப்டன்), டெஜ்நரேன் சந்தர்பால், ரேமன் ரைபர், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரஹ்கீம் கார்ன்வால், அல்சாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமல் வாரிக்கன்.

இதையும் படிங்க :IND Vs WI: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

Last Updated : Jul 12, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details