அகமாதாபாத்:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக நடைபெற்ற நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் முன்னிலை பெற்றது.
அப்போட்டியில், சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வான நிலையில், காயத்திலிருந்து மீண்டு வந்த கேப்டன் ரோஹித் 60 ரன்களை குவித்து இந்தியாவின் 1000ஆவது ஒருநாள் போட்டியையும் வென்று கொடுத்தார்.
இந்நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (பிப். 9) மதியம் தொடங்குகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
ராகுல் வருகை
இந்திய துணை கேப்டன் கே.எல். ராகுலுக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது போட்டியில் களமிறங்கியுள்ளார். இதனால், சென்ற போட்டியில் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கிய இஷான் கிஷனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் பொல்லார்ட்டுக்கு உடற்தகுதியில் பிரச்சனை இருப்பதால், அவருக்கு பதிலாக ஓடியன் ஸ்மித் களமிறக்கப்பட்டுள்ளார். கேப்டனாக பூரன் செயல்பட உள்ளார்.
பிளேயிங் XI
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
மேற்கிந்திய தீவுகள்: பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், ஃபாப்பியன் ஆலன், ஆல்ஸாரி ஜோசப், கீமர் ரோச், அகேல் ஹொசைன்.
இதையும் படிங்க: '83' உலக கோப்பைக்கும் லதா மங்கேஷ்கருக்கும் உள்ள வியக்க வைக்கும் வரலாறு