கயானா: இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 08) கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன், ரவி பிஸ்னோய் நீக்கப்பட்டு. யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக ரோஸ்டன் சேஸ் சேர்க்கப்பட்டார். இந்த போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டிங் தேர்வு செய்து பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தனர். 7.4 ஒவரில் 55 ரன்கள் எடுத்த நிலையில், அக்சர் பந்து வீச்சில் கைல் மேயர்ஸ் அர்ஷ்தீப் சிங்கிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பின் வந்த ஜான்சன் சார்லஸ் 12 ரன்களுக்கு வெளியேறினார். கடந்த இரு ஆட்டங்களிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த பூரான் இந்த போட்டியில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபக்கம் நிலைத்து நின்ற பிராண்டன் கிங் 5 பவுண்டரிகள், 1 சிக்கருடன் 42 ரன்களுக்கு வெளியேறினார்.
இதையும் படிங்க:2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!
தொடந்து வந்த ஹெட்மயர் 9 ரன்னில் வீழ்ந்தார். பின்னர் களம் கண்ட கேப்டன் ரோவ்மேன் பவல் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை 150ஆக உயர்த்தினார். 20 ஒவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 159 ரன்கள் சேர்த்தது. ரோவ்மேன் பவல் 40 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்பர்ட் 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் தரப்பில் குதீப் யாதவ் 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அக்சர் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்கள் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்வால் மற்றும் ஷுப்மன் கில் சோபிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்திய அணி 17.4 ஒவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என 49 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களும், ஓபேட் மெக்காய் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
மீதம் இருக்கும் இரண்டு ஆட்டங்களும் அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் 4-வது போட்டி வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.
சாதனை: இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக 30 ஆட்டங்களில் 50 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்தார். முன்னதாக யுஸ்வேந்திர சாஹல் 34 ஆட்டங்களில் 50 விக்கெட்கள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
இதையும் படிங்க:ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுத்துக்கு முன்னேறிய இந்திய அணி!