ஆஸ்திரேலியாவின் பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியான, மகளிர் பிக் பாஷ் லீக் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்த 8ஆவது மகளிர் பிக் பாஷ் லீக்கில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெமிமா, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஒப்பந்தமாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்பது தனக்கு கிடைத்துள்ள கெளரவம் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மகளிர் பிக் பாஷ் லீக்கில், மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடி, 333 ரன்கள் எடுத்திருந்தார். 8ஆவது மகளிர் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ள மூன்றாவது வீராங்கனை ஜெமிமா. இவரைத் தவிர, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், பூஜா வஸ்த்ரகர் ஆகியோரும் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். ஹர்மன்ப்ரீத் கெளர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காவும்- பூஜா வஸ்த்ரகர், பிரிஸ்பேன் ஹீட் அணிக்காவும் விளையாட உள்ளனர்.
இதையும் படிங்க: ஐசிசி "பிளேயர் ஆப் தி மன்த்" விருது ஆகஸ்ட் 2022 - இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்க்கு பரிந்துரை