தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

180 டிகிரி கோணத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் கோலி! - தமிழ் விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 180 டிகிரி கோணத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொலியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேப்டன் விராட் கோலி
WATCH: Virat Kohli takes a shot at 180 degree landings

By

Published : May 27, 2020, 9:21 PM IST

Updated : Jun 27, 2022, 1:01 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.

இதில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. அதிலும் இவர் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து, கரோனா விழிப்புணர்வு குறித்து வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்நிலையில் விராட் கோலி மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், 180 டிகிரி கோணத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் காணொலியை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

கோலியின் ட்விட்டர் பதிவில், '180 டிகிரி கோணத்தில் முதல் முறையாக இதனைச் செய்கிறேன். இது மிகவும் சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும்’ என்று பதிவிட்டு அதனுடன் உடற்பயிற்சி செய்யும் காணொலியையும் இணைத்துள்ளார்.

விராட் கோலியின் இந்த ட்விட்டர் காணொலி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இதையும் படிங்க:ஓய்வுக்கு பின் வர்ணனையில் கலக்குவேன்..!

Last Updated : Jun 27, 2022, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details