தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENG vs PAK: இங்கிலாந்து வெற்றி; ரஷித், அலி சுழலில் வீழ்ந்தது பாக். - பாகிஸ்தான் இங்கிலாந்து டி20 போட்டி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பாகிஸ்தான், அடில் ரஷித், மொயின் அலி, இங்கிலாந்து, ADIL RASHID, MOEN ALI
Watch: England level T20 series with 45-run win against Pakistan

By

Published : Jul 19, 2021, 8:03 PM IST

லீட்ஸ் (இங்கிலாந்து): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடிவருகிறது. முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.

இங்கிலாந்து இன்னிங்ஸ்

இதனையடுத்து நேற்று (ஜூலை 18) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களைக் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 59, லியம் லிவிங்ஸ்டன் 38, மொயின் அலி 36 ரன்களைக் குவித்தனர். கடந்த போட்டியில் லிவிங்ஸ்டன் 43 பந்துகளில் 103 ரன்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் முகமது ஹசானீன் 3 விக்கெட்டுகளையும், இமாத் வாசீம், ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டுத்தாக்கிய சுழற்கூட்டணி

இதையடுத்து, 201 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை இங்கிலாந்தின் சுழற்பந்து கூட்டணியான அடில் ரஷித், மொயின் அலி கூட்டணி தவிடுப்பொடியாக்கியது. ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களையே சேர்த்தது.

இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் சாகிப் மகமுத் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 37 ரன்களும், சதாப் கான் 36 ரன்களும் எடுத்தனர்.

தொடர் சமன்

இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை (ஜூலை 19) நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ’ஓரிரு போட்டிகள் ஒரு வீரரின் வாழ்க்கையை முடித்துவிடாது’ - குல்தீப்

ABOUT THE AUTHOR

...view details