ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி வரும் 18ஆம் தேது ஹராரேயில் நடக்கிறது. இதனிடையே ஹராரேவில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வாஷிங்டன் சுந்தருக்கு தோளில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் தொடரில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது விளையாடுவார் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விளயாடிது குறிப்பிடத்தக்கது.