தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’எனது கிரிக்கெட் வாழ்வில் இரண்டு நிறைவேறாத ஆசைகள்’ - மனம் திறக்கும் சச்சின்! - சச்சின் டெண்டுல்கர்

கவாஸ்கர் உடன் விளையாடாததும், விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாடாததும் தனது கிரிக்கெட் வாழ்வின் நிறைவேறாத ஆசைகள் என சச்சின் கூறியுள்ளார்.

Sachin Tendulkar, சச்சின் டெண்டுல்கர்
Wanted to play alongside Gavaskar and against Sir Richards: Tendulkar

By

Published : May 30, 2021, 8:17 PM IST

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னுடைய கிரிக்கெட் வாழ்வில், எனக்கு இரண்டு நிறைவேறாத ஆசைகள் இருந்தன.

முதலாவது, என்னுடைய பேட்டிங் ஹீரோவான சுனில் கவாஸ்கர் உடன் நான் இணைந்து விளையாடியதில்லை என்பது. நான் விளையாட வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

மற்றொன்று, என்னுடைய குழந்தைப் பருவ ஹீரோவான சர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக ஆடாதது. நல்வாய்ப்பாக, அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிவிருக்கிறேன். இருப்பினும், சர்வதேச போட்டிகளில் விளையாடாதது வருத்தமளிக்கிறது.

என்னதான், விவியன் ரிச்சர்ட்ஸ் 1991ஆம் ஆண்டில் தான் ஓய்வு பெற்றார் என்றாலும், அவருக்கு எதிராக விளையாடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு - பிசிசிஐ அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details