தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"ஷமிக்கு சிறிய சவாலை கொடுக்க நினைத்தோம்" - கேப்டன் ரோஹித் சர்மா! - ஆஸ்திரேலிய அணி தோல்வி

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதில் கடைசி ஓவரை மட்டும் பவுலிங் போட்ட முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Wanted
Wanted

By

Published : Oct 17, 2022, 10:47 PM IST

பிரிஸ்பேன்: டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று(அக்.16) தொடங்கியது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் நுழைந்தன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் குவித்தனர். அடுத்ததாக இறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலேயே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டத்தின் 20வது ஓவரை போடுவதற்காக முகமது ஷமியை அழைத்தார். கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் சென்றது. அடுத்த 4 பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார் ஷமி. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, கடைசி ஓவரை மட்டும் ஷமிக்கு கொடுத்ததற்காக காரணத்தை கூறினார். அவர் கூறும்போது, "ஷமி நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாட வருவதால் இந்த வாய்ப்பை கொடுக்க நினைத்தோம். சிறிது இடைவெளி விட்டு அவர் இறங்கும்போது எவ்வளவு வீரியமாக இருப்பார் என்று எங்களுக்கு தெரியும். அதனால்தான் ஷமிக்கு ஒரு சிறிய சவாலை கொடுக்க நினைத்தோம். அதேபோல் அவரை அழைத்ததற்கு என்ன செய்தார் என்பதை பார்த்தோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..? களமிறங்கும் பிரபலங்களின் வாரிசுகள்...

ABOUT THE AUTHOR

...view details