அபுதாபி: ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று (ஆக.27) தொடங்கி, செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் களமிறங்குகின்றன. நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த டி20 தொடரில் நாளை இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலியின் 100ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தானுடன் - இந்தியா பாகிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது 100ஆவது சர்வதேச டி20 ஆட்டத்தை விளையாட உள்ளார். 100 டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு, இது 100ஆவது சர்வதேச டி20 போட்டியாகும். அண்மையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. விராட் கோலி கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பரில் சர்வதேச அரங்கில் சதம் அடித்திருந்தார். 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, டெஸ்டில் 27 சதங்களும், ஒருநாள் போட்டியில் 43 சதங்களும் அடித்துள்ளார். இதனிடையே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், இந்த 100ஆவது போட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில், அனைத்து விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, இதுவரை 99 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி 3,308 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 அரை சதங்கள் அடங்கும்.
இதையும் படிங்க: பேட்ஸ்மேன்களுக்கு அப்ரிடி களத்தில் இருப்பதே சிறந்தது...கே.எல்.ராகுல்