ஹைதராபாத்: ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் அடித்தார். மேலும், இந்த இன்னிங்ஸில் கோலி விளையாடி கொண்டிருக்கும் போது அவர் 13,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அவர் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கர்காரா, ரிக்கி பாண்டிங், சானாத் ஜெயசூர்யார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர் மிக குறைந்த இன்னிங்ஸில் 13,000 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு 8000, 9000, 10000, 11000, 12000 ரன்களை அதிவேகமக கடந்த வீரரும் விராட் கோலி தான். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்கையில் 77வது சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் 47 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் டி20 1 சதங்கள் என ஒட்டுமொத்தமாக 77 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்தபடியாக உள்ளார்.
விராத் கோலியின் சாதனைகள்
ஆசிய கோப்பையில் அதிக சதங்கள்: விராட் கோலி 4 சதங்களை அடித்து ஆசிய கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முன்னதாக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா 6 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.