மொஹாலி :இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜன. 11) பஞ்சாப்பின், மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏறத்தாழ 14 மாத இடைவெளிக்கு பின்னர் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய அணிக்கு திரும்புவதால் மைதானத்தில் அவர்களை காண ரசிகர்கள் பேராவல் கொண்டு இருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.