தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

MS Dhoni Bike Collection: தோனியின் பண்ணை வீட்டில் உள்ள பைக்குகள்.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன? - பைக் ரேஸ்

ராஞ்சியில் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமான பண்ணை வீட்டில், அவருக்கு பிடித்த பைக் கலெக்‌ஷன்களை ஒரு பைக் ஷோரூம் போல வரிசையாக நிறுத்தி வைத்திருப்பதை முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பார்வைவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 18, 2023, 10:55 PM IST

MS Dhoni Bike Collection: தோனியின் பண்ணை வீட்டில் உள்ள பைக்குகள்.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

ராஞ்சி: "தோனி சென்னை வந்தால் அவரிடம் ஒரு பைக்கை கொடுத்துவிடுவோம்.. அத்துடன் அவர் மாயமாகி விடுவார்", இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான சீனிவாசன் தோனி குறித்து கூறியது. சாதாரண இளைஞராக கிரிக்கெட் கனவுகளோடு திரிந்த காலங்களிலும் சரி, உலகமே திரும்பிப் பார்க்கும் எம்.எஸ்.தோனியாக மாறிய பின்னரும் சரி பைக் மீதான அவரது காதல் மாறவில்லை.

இதனை உறுதி செய்யும் விதமாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் அணிவகுத்து நிற்கும் பைக்குகளின் வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தல தோனியின் பைக் மற்றும் கார் கலெக்ஷன்களை பார்வையிட்டு வாய் பிளந்து நிற்க, அப்போது அங்கு நடந்த நிகழ்வை தோனியின் மனைவி சாக்ஷி தனது செல்ஃபோனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் சுனில் ஜோஷியும் இருக்கிறார்.

வீடியோவில் பேசும் வெங்கடேஷ் பிரசாத், "இது வீடா இல்லை பைக் ஷோரூமா என ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு கேமராவை ஏந்தியவாறு, 'முதல் முறை இதை பார்த்தபோது என்ன நினைத்தீர்கள்?' என அவரிடம் சாக்ஷி தோனி கேட்கிறார். அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பிரசாத், 'நான் இங்குவருவது முதல் முறையல்ல. நான்காவது முறை. இங்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது' எனவும் கூறுகிறார்.

இதனைத்தொடர்ந்து கேமராவை தோனி பக்கம் திருப்பிய சாக்ஷி தோனி "ஏன் இப்படி ஒரு ஆசை உங்களுக்கு... சொல்லுங்கள்.. தோனி சொல்லுங்கள்" என கேட்கிறார். குழந்தை போல ஆர்வத்துடன் பதிலளிக்கும் தோனி, ''என்னிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் வாங்கிக்கொண்டீர்கள். எனக்காக இருப்பது இந்த பைக் கலெக்ஷன்கள் மட்டும் தான். இதை மட்டும்தான் நீங்கள் எனக்காக அனுமதித்திருக்கிறீர்கள்’’ என சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெங்கடேஷ் பிரசாத், "எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த சாதனையாளர், இன்று வரை என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதர். அவரின் ஆர்வத்தால் மட்டுமே இப்படி ஒரு இடம் உருவாகி இருக்கிறது'' என புகழாரம் சூட்டியுள்ளார்.

அனைவருக்கும் ஏதாவது ஒரு தீராத காதல் இருக்கும். அந்த வகையில் தோனியின் இந்த பைக் கலெக்‌ஷன் மற்றும் அவரது குறும்புத்தனமான பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அஜித் குமாருக்கும், தல தோனிக்கும் ஒத்துப்போகும் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

சமீபத்தில்தான் அஜித் குமார் பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அவர் என்னதான் சினிமாக்களில் ஹீரோவாக நடித்தாலும் பைக் மீது இருக்கும் ஆர்வம் அளவு கடந்தது. அதேபோல் தான் தல தோனியும் என்னதான் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகனாக வலம் வந்தாலும் அவரும் ஒரு பைக் பிரியர்தான் என்பதை இந்த வீடியோவின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

இதையும் படிங்க:கூரைக்குள் குட்டி இசைஞானி: கேரளாவில் வைரலான சிறுவன் அபிஜித் வீடியோ.!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details