அன்டிகுவா:19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகளில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
இதில், நேற்று (பிப். 2) நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டி அன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று (பிப். 2) மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
200 ரன்கள் பார்டனர்ஷிப்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் தூல் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். தொடக்க வீரர்களான ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் விரைவாக தங்களது விக்கெட்டை இழக்க, ஷேக் ரஷீத் உடன் கேப்டன் யாஷ் தூல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்த ஜோடி ஏறத்தாழ 33 ஓவர்கள் விளையாடி 204 ரன்களை குவித்தது. கேப்டன் யாஷ் தூல் 110 ரன்களிலும், ரஷீத் 94 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள் வெளியேறிய பின்னரும் ராஜ்வர்தன், நிஷாந்த் சிந்து, தினேஷ் பானா ஆகியோர் சற்று அதிரடி காட்டி ஆஸ்திரேலிய அணிக்கு 291 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
வெற்றியைத் தேடி தந்த விக்கி
ஆஸ்திரேலிய பந்துவீச்சு சார்பில் ஜோக் நிஸ்பெட், வில்லியம் சால்ஸ்மேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டைகளை கைப்பற்றினர். இதன்பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய ஓப்பனர்களில் ஒருவரான வைல்லி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்றொரு ஓப்பனரான கேம்ப்பெல் கெல்லாவே, கோரே மில்லருடன் ஜோடி சேர்ந்தார்.