தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியின் ப்ளூ டிக் நீக்கம்; சில மணிநேரத்தில் சேர்ப்பு... நடந்தது என்ன? - தோனி ட்விட்டர் சர்ச்சை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து 'ப்ளூ டிக்' எனப்படும் அதிகாரப்பூர்வ முத்திரையை ட்விட்டர் நிறுவனம் திரும்பப் பெற்று சில மணி நேரத்தில் சேர்த்துள்ளது.

By

Published : Aug 6, 2021, 5:40 PM IST

டெல்லி: சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ பயனாளர்களின் பக்கத்துக்கு 'ப்ளூ டிக்' எனப்படும் முத்திரையை வழங்குவது வாடிக்கை.

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களில் பொய் கணக்குகள் தொடங்குவதை தடுக்கவே இந்த முறை வழக்கத்தில் உள்ளது. மேலும், அந்தப் பக்கம் தொடர் செயல்பாட்டில் இருக்கிறது என்பதற்கும் ப்ளூ டிக் முத்திரையே சான்று.

காரணம் தெரிவிக்கவில்லை

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி ஆகியவற்றை பெற்றுத்தந்த கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பக்கத்திற்கு அளிக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் முத்திரையை ட்விட்டர் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது.

ப்ளூ டிக் நீக்கப்பட்ட தோனியின் ட்விட்டர் பக்கம்

ட்விட்டர் நிறுவனம் இதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து 'ப்ளூ டிக்' எனப்படும் அதிகாரப்பூர்வ முத்திரையை ட்விட்டர் நிறுவனம் திரும்பப் பெற்று சில மணி நேரத்திலேயே மீண்டும் சேர்த்துள்ளது.

மீண்டும் வந்தது ப்ளூ டிக்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்தாண்டு ஐபிஎல் தொடர், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதையும் படிங்க: தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா

ABOUT THE AUTHOR

...view details