தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 10:27 PM IST

ETV Bharat / sports

2023 Cricket World Cup: உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்!

2023 ஐசிசி உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்த தொடரின் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பற்றியதே இந்த தொகுப்பு.

Chris Gayle
Chris Gayle

ஹைதராபாத்: ஐசிசி நடத்தும் 13வது ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், வீரர்கள் இடையே மட்டுமல்லாமல், ரசிகர்கள் இடையே ஒரு வித்தியாசமான ஆற்றல் உருவாகி உள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டியாக அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி சந்திக்கின்றது. டி-20 கிரிக்கெட் வந்ததிலிருந்து ரசிகர்கள் அதிக சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களையே விரும்புகின்றனர். இந்நிலையில், 2023 உலகக் கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாக உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் ஐந்து வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

1) கிறிஸ் கெய்ல்

இந்த வரிசையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் அனைத்து கிரிக்கெட் வடிவத்திலும் மொத்தமாக 553 சிக்ஸர்களை விளாசியுள்ளார். குறிப்பாக 2003 இருந்து 2019 வரை அவர் விளையாடிய 35 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 49 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2) ஏபி டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த இவர் 2007 முதல் 2015 வரை 22 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 1,207 ரன்கள் விளாசிய ஏபி டி வில்லியர்ஸ்37 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

3) ரிக்கி பாண்டிங்

முன்னால் ஆஸ்திரேலியா கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் வரிசையில் ஒருவராக இருக்கக் கூடிய இவர் 5 உலக கோப்பைகளில் விளையாடி உள்ளார். 42 இன்னிங்ஸில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் அடித்துள்ளார். அதில் 31 சிக்ஸர்கள் அடங்கும்.

4) பிரண்டன் மெக்கல்லம்

முன்னால் நியூசிலாந்து பேட்டரான பிரண்டன் மெக்கல்லம் உலக கோப்பை போட்டிகளில் 29 சிக்ஸர்கள் விளாசி இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவர் 2003 முதல் 2015 வரை விளையாடிய 27 இன்னிங்ஸில் 742 ரன்கள் குவித்துள்ளார்.

5) ஹெர்ஷல் கிப்ஸ்

முன்னால் தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரரான ஹெர்ஷல் கிப்ஸ் உலக கோப்பை போட்டிகளில் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவர் அந்த கால கட்டத்தில் மிகவும் ஆபத்தான பேட்டராக வளம் வந்தவர். இவர் 1999 முதல் 2007 வரை விளையாடிய 24 போட்டிகளில் 1,067 ரன்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கிரிக்கெட் வரலாற்றில் வீடியோ ஆதாரம் இல்லாத சிறந்த இன்னிங்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details