தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2021 PLAY-OFFS: வெளியேறியது கோவை; குவாலிஃபயரில் திண்டுக்கல் - TNPL 2021 ELIMINATOR DINDIGUL

டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் கோவை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

TNPL
குவாலிஃபயரில் திண்டுக்கல்

By

Published : Aug 12, 2021, 6:09 AM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் ப்ளே-ஆஃப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாக்-அவுட் போட்டியான எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் நேற்று (ஆக. 11) மோதின.

இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை சேர்த்தது‌. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 40 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். திண்டுக்கல் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

இதையடுத்து, தனது பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் அணி, 11 அவர்களுக்கு 59/3 என்ற நிலையில் தத்தளித்து வந்தது‌.

நங்கூரமிட்ட ஜோடி

கடைசி 9 ஓவர்களில் 85 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் ஹரி நிஷாந்த் - அருண் ஜோடி விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ரன்களை குவித்தனர். வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹரி நிஷாந்த் 59 ரன்களிலும், மோதிக் ஹரிஹரன் ரன் ஏதும் இன்றியும் வெளியேறினர்.

ஒருபுறம் அதிரடியாக ரன் சேர்த்த விவேக், 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி திண்டுக்கல் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அருண் 26 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.

குவாலிஃபயர் - 2

இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் இத்தொடரில் இருந்து வெளியேறியது. நாளை (ஆக. 13) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் திண்டுக்கல் டிராகன்கஸ் அணி மோதவுள்ளது‌.

நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்!

ABOUT THE AUTHOR

...view details